பா. ரெங்கதுரையின் சிறு குறிப்புகள்

Tuesday, February 22, 2011

தமிழ்த் தாத்தாவின் 157ஆவது பிறந்த நாள்



(திண்ணை இணைய இதழில் இந்தக் குறிப்பு வெளிவந்துள்ளது. குறிப்பில் நான் எழுதிய ஜாதி சம்மந்தமான சில வார்த்தைகள் திண்ணை ஆசிரியர் குழுவினரால் நீக்கப்பட்டுள்ளன. அவை தடித்த எழுத்துகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.)



பிப்ரவரி 19ஆம் தேதி, தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாத ஐயரின் 157ஆவது பிறந்த நாள்.



எவர் கண்ணிலும் அவ்வளவு சுலபமாகத் தென்பட்டு விடக்கூடாது என்ற நோக்கத்துடன் சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தினுள் நிறுவப்பட்டிருக்கிறது அன்னாரின் உருவச் சிலை. அவரை "உஞ்ச விருத்திப் பார்ப்பனர்” என்று வசை பாடிய தமிழக அமைச்சர் க. அன்பழகன் போன்ற சைவ முதலியார் ஜாதி வெறியர்கள், வேண்டா வெறுப்பாக அந்தச் சிலைக்கு வருடா வருடம் மாலை அணிவிப்பார்கள். வாய்ப்புக் கிடைத்தால், ஜாதி அடிப்படையில் உ.வே.சா.வை மறைமுகமாகப் பழித்துப் பேசவோ அல்லது அவரை மட்டும் கொஞ்சமாகப் புகழ்ந்துவிட்டு, அவருடைய ஜாதியை வெளிப்படையாகப் பழித்துப் பேசவோ தயங்காத வக்கிரம் மிகுந்தவர்கள் அன்பழகன் போன்றவர்கள்.



சமஷ்டி உபநயனம் எனப்படும் பூணூல் அணிவிக்கும் சடங்குகளை நடத்துவதிலும், சுஜாதா போன்ற பிராமண மசாலா எழுத்தாளர்களைக் கௌரவிப்பதிலும் மட்டுமே ஆர்வம் காட்டும் தமிழ்நாடு பிராமணர் சங்கம் போன்ற அமைப்புகளின் இன்றைய நிர்வாகிகளுக்கு உ.வே.சா. என்று ஒருவர் இருந்ததே தெரிந்திருக்காது.



காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர் போன்றவர்களுக்கு, தமக்கு எதிரான வழக்குகளை ஆட்சி மாற்றம் வருவதற்குள் எப்படி நீர்த்துப் போகச் செய்வது என்பதுதான் உடனடிக் கவலை. மடத்து அக்காரவடிசலில் நெய்யின் அளவைப் பற்றி இவர்கள் காட்டும் அக்கறையைக்கூட உ.வே.சா. பற்றிக் காட்ட்மாட்டார்கள்.



சோ போன்ற அறிவு ஜீவிகளுக்கோ, ஹிந்து மகா சமுத்திரத்தில் ராமாயணம், மகாபாரதம் தவிர வேறு எதுவும் கண்ணில் படுவதில்லை. சோவைப் பொருத்தவரை, சங்க இலக்கியச் சுவடிகளைத் தேடிக் கண்டுபிடித்துப் பதிப்பிப்பது போன்ற வெட்டி வேலைகளில் வாழ்நாளை வீணடித்த ஓர் அசட்டு பிராமணர் உ.வே.சா.



முக்குலத்தோர், குறிப்பாகத் தேவர் ஜாதியினர் ஆதிக்கம் செலுத்தும் தமிழக இடதுசாரிக் கட்சிகளுக்கோ கார்ல் மார்க்ஸைவிட முத்துராமலிங்கத் தேவர் முதன்மையான தெய்வமாகி விட்டார். அவருடைய குருபூஜையை மறக்க மாட்டார்கள். ஆனால், உ.வே.சா.வின் பிறந்த நாள் நினைவுக்கு வராது.



ஆர்.எஸ்.எஸ். பாசறையில் வளர்ந்தவர் என்று பீற்றிக் கொள்ளும் தமிழக பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர் இல. கணேசன் போன்ற்வர்களுக்கோ, கருணாநிதி கையால் தரப்படும் மலர்ச் செண்டுதான் வாழ்வின் முதன்மையான லட்சியமே. உ.வே. சாமிநாத ஐயருக்குச் செலுத்தும் மரியாதை எல்லாம் நேர விரயம்.



வாழ்க செம்மொழி!

Labels: , , , , , , ,

Monday, February 21, 2011

பிரேமானந்தா


வன்புணர்ச்சி மற்றும் கொலை வழக்குகளில் இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற பிரேமானந்தா காலமானார். இது பற்றிய தினமணி செய்தி.

1995ஆம் வருடம் இவர் மீது குற்றம் சாட்டப்பட்டு வழக்குத் தொடரப்பட்டது. அப்போது இவர் சிறிய காரியம் ஒன்றைச் செய்திருந்தால் இவ்வழக்கிலிருந்து சுலபமாக விடுதலை அடைந்திருக்கலாம். குறைந்தபட்சம், ஒரு பெரிய ஆதரவாளர் பட்டாளத்தையாவது திரட்டி இருக்கலாம்.

"நான் ஒரு பிற்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன். என்னுடைய வளர்ச்சியைப் பொறுக்க முடியாமல் பிராமணர்களும், சங்கர மடமும் சேர்ந்து கொண்டு செய்யும் சதியே இது” என்று அவர் கருணாநிதி பாணியில் ஓர் அறிக்கை விட்டிருந்தாலே போதும். பாதி வழக்குகள் பணால் ஆகியிருக்கும்.

ஆனால், அவர் அப்படிச் செய்யவில்லை. "நான் ஒரு இந்து சாமியார். எனக்கு எதிராக போப் சதி செய்கிறார்” என்றெல்லாம் அசட்டுத்தனமாகப் பேசி தன் தலையில் தானே மண்ணைப் போட்டுக் கொண்டார்.

அவர் சிறையில் இருந்த போது, அவரைக் கிறிஸ்தவராக மதம் மாற்றும் முயற்சிகள், அதே சிறையில் இருந்த (சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் நாவரசு கொலையாளி) ஜான் டேவிட்டின் மூலம் மேற்கொள்ளப் பட்டன. ஆனால், அவர் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.

பிரேமானந்தா தண்டனைக்குரிய பல தவறுகளைச் செய்தவர். ஆனால், "பார்ப்பன சதி" என்ற ஆயுதத்தைக் கையில் எடுத்துத் தப்பிக்க முயல்வில்லை. அதேபோல, கிறிஸ்தவராக மதம் மாறவும் இல்லை.

இதற்காக அவரைப் பாராட்டலாம்.


Labels: , ,

Friday, February 18, 2011

ஊடகப் பார்வையில் பாதிரியார் கொலை


ஹோமோ செக்ஸ் பிரச்சினை காரணமாகத் திருநெல்வேலி பாளையங்கோட்டையில் பாதிரியார் ஒருவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். அது பற்றிய தினமலர் செய்தி.

இந்து சாமியார்கள் எவரும் சுய இன்பம் செய்து கொண்டால்கூட, அவர்கள் ஏதோ பெரிய கற்பழிப்பில் ஈடுபட்டு விட்டது போல, அதைப் பூதாகாரமான செய்தியாகத் திரித்துத் தமிழ் ஊடகங்கள் (தினமலர் உட்பட) வெளியிட்டு வருகின்றன.

ஆனால், பிற மத நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் - குறிப்பாகப் பாதிரியார்கள் - பெரும் பாலியல் குற்றங்களில் ஈடுபடும்போதுகூட அதைத் தந்திரமாக மறைத்து அல்லது மிகவும் பூடகமாக அச்செய்திகளை வெளியிடுவது தமிழ் ஊடகங்களுக்குக் கை வந்த கலை.

இந்தப் போக்குக்கு மற்றொரு சிறந்த உதாரணம் தினமலர் வெளியிட்டுள்ள இச்செய்தி:

பொன்ராஜ், பாதிரியாருடன் “நெருங்கி” பழகுவாராம்.

- என்று இருவருக்கும் இடையே உள்ள ஹோமோ செக்ஸ் உறவைப் பூடகமாகக் குறிப்பிட்டுள்ளது தினமலர். தினமலரே இந்த லட்சணத்தில்தான் இந்தச் செய்தியை வெளியிடுகிறது என்றால், மற்ற தமிழ்ப் பத்திரிகைகளைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.

பாதிரியார் கொலையை இந்து பயங்கரவாதம் என்று எழுதாத வரை, தமிழ் ஊடகங்களுக்கு பூச்செண்டுதான் தர வேண்டும்.

Labels: , ,

Thursday, February 17, 2011

இனம் இனத்துடன் சேரும்


இல. கணேசனுக்கு கருணாநிதி நேரில் வாழ்த்து

தமிழக பாரதிய ஜனதாவையும், இந்து இயக்கங்களையும் கருணாநிதி குடும்பத்திடம் அடகு வைத்து ஒழித்துக் கட்டியவர்களுள் முதன்மையானவர் இல. கணேசன்.

அதற்குக் கருணாநிதி காட்டும் சிறு நன்றியே இந்தப் பூங்கொத்து. கருணாநிதியின் வஞ்சக மனதில், அவர் கொடுத்தது பூங்கொத்து அல்ல; தமிழக பாரதிய ஜனதாவுக்கு வைத்த மலர் வளையம்.

இலங்கை இந்துக்களுக்கு துரோகம் செய்த கருணாநிதி, தமிழக இந்துக்களுக்கு துரோகம் செய்த இல. கணேசனை நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவிப்பதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. கருணாநிதியின் வார்த்தைகளில் சொல்வதானால், இனம் இனத்துடன் சேர்ந்திருக்கிறது. அவ்வளவுதான்.

Labels: , ,

Tuesday, February 15, 2011

பஹ்ரைனில் இந்துத்துவ சதி

ஷியா பெரும்பான்மை நாடான பஹ்ரைன், ஸுன்னி முஸ்லிம்களால் ஆளப்படுகிறது. எகிப்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்குப் பின்னர், பஹ்ரைனில் வாழும் ஷியா முஸ்லிம்கள் அதே போன்ற போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். இதுவரை இரண்டு ஷியா ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசாங்கப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இது பற்றிய நியூ யார்க் டைம்ஸ் செய்தி.

பஹ்ரைன் நாட்டில் பல இந்துக்கள் பணிபுரிகின்றனர். இந்துத்துவர்கள் பலரும் அங்கு ஊடுருவியுள்ளனர். அமைதிப் பூங்காவாகத் திகழ்ந்து வரும் அந்த இஸ்லாமிய நாட்டில் ஷியாக்களின் இந்தப் போராட்டத்தைத் தூண்டிவிட்டு, இஸ்லாமிய ஒற்றுமையைக் குலைக்கும் சதி சூழ்ச்சிகளைச் செய்வது நிச்சயம் இந்துத்துவ சக்திகளாகவே இருக்க முடியும்.

இது பற்றிய உண்மைகளை வெளியே கொண்டுவர உடனடியாக ஓர் உண்மை அறியும் குழுவை பேராசிரியர் அ. மார்க்ஸ் தலைமையில் பஹ்ரைனுக்கு அனுப்ப வேண்டும்.

அக்குழுவினர் இந்துத்துவம் தவிர அமெரிக்க, யூத சதியும் இதில் அடங்கியுள்ளதா என்பதையும் கண்டறிய வேண்டும்.

பஹ்ரைனில் இந்துத்துவ சதி பற்றிய விரிவான கட்டுரைகளை, மார்ச் 2011 காலச்சுவடு இதழில் ஜே.என்.யு. ஆய்வாளர் க. திருநாவுக்கரசும், உயிர்மை இதழில் யமுனா ராஜேந்திரனும், தீராநதி இதழில் அ. மார்க்ஸும், கலா கௌமுதியில் சாரு நிவேதிதாவும் எழுதுகின்றனர்.

படிக்கத் தவறாதீர்கள்.

Labels: , , ,

Monday, February 14, 2011

ஒரு கற்பனை அழைப்பிதழ்

கோவையில் 1998ஆம் ஆண்டு பிப்ரவரி 14 அன்று இந்துத்துவ பாசிசத்திற்கு எதிராக குண்டு வெடிப்புப் போராட்டம் நடத்திய ஜனநாயகப் போராளிகளுக்கு பாராட்டு விழா.

நாள்: 14-2-2011 நேரம்: மாலை 6 மணி

இடம்: தேவநேயப் பாவாணர் நூலக அரங்கம், எல்.எல்.ஏ. பில்டிங், சென்னை.

தலைமை: நல்லி குப்புசாமி செட்டியார்

வரவேற்புரை: மனுஷ்ய புத்திரன்

சிறப்புரை:

தோழர் ஆர்.நல்லக்கண்ணு
அ. மார்க்ஸ்
சாரு நிவேதிதா
ரவிக்குமார் எம்.எல்.ஏ.
ஞாநி
கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன்
மற்றும் பலர்

அனைவரும் வருக!

விழா ஏற்பாடு: உயிர்மை பதிப்பகம்.

Event Sponsors: தினமலர், ஸ்ரீராம் சிட்ஸ், கோவை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ்

Labels: , , ,

திண்ணை கட்டுரை

நான் எழுதிய இஸ்லாமிய உலகம் பற்றிய அமெரிக்க அவதானிப்புகள் என்ற செய்திக் கட்டுரையை திண்ணை இணைய இதழ் வெளியிட்டுள்ளது.



Labels: , , ,

Friday, February 11, 2011

பெரியாரியப் பாதையில் தலிபான்

பாகிஸ்தானில் மகளிர் கல்லூரி வெடிவைத்துத் தகர்ப்பு: தினமணி செய்தி

பால் சமத்துவத்தை நிலைநாட்ட, மாணவப் பருவத்திலுள்ள ஆண்களையும் பெண்களையும் தனித் தனியாகப் பிரித்து வைத்துக் கல்வி அளிக்கக்கூடாது. இரு பாலாரும் படிக்கும் (கோ-எட்) கல்லூரிகளை மட்டும் அனுமதிக்க வேண்டுமே தவிர பெண்கள் மட்டுமே படிக்கும் கல்லூரிகள் கூடாது என்ற முற்போக்கான எண்ணம் கொண்ட தலிபான் ஆதரவாளர்களை, இந்தச் செயலைச் செய்ததற்காகப் பாராட்டுவோம்.

Labels: , , , ,

Thursday, February 10, 2011

இந்து அறநிலையத் துறை பற்றி

தமிழ்ஹிந்துவில் வெளிவந்த அறநிலையத் துறை சம்மந்தமான கட்டுரை பற்றி: http://www.tamilhindu.com/2011/02/sand-blasting-in-temples/

பிரிட்டிஷ் காலனிய அரசாங்கம், இந்து அறநிலையத் துறை என்ற அமைப்பை ஏற்படுத்தியதே, கோயில்களைத் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து கொள்ளையடிப்பதோடு, இந்து ஒற்றுமை ஏற்படுத்துவதிலும், இந்து மத வளர்ச்சியிலும் கோயில்கள் எந்தவிதப் பங்கையும் வகிக்கவிடாமல் செய்வதற்காகவே.

ஹிந்து விரோதி நேருவின் காங்கிரஸ் அரசாங்கமும், திராவிட இயக்கங்களும் இதே கொள்கையை/கொள்ளையைத் தொடர்ந்தன.

அரசாங்கம் இந்து ஆலயங்களை விட்டு வெளியேற வேண்டும் என்ற கோஷம் இந்து இயக்கங்களால் தேர்தல் நேரத்தில் முன்வைக்கப்படுவதோடு சரி. அவர்களுக்கே அதில் அவ்வளவு நம்பிக்கை இருப்பதாகத் தெரியவில்லை.

பா.ஜ.க. மத்தியில் ஆட்சியில் இருந்த 7 ஆண்டுகளில் இதை எளிதில் நிறைவேற்றி இருக்கலாம். தி.மு.க.வுக்கு பா.ஜ.வின் தயவு தேவையாக இருந்தபோது, ஆதரவு கொடுக்க இதை முதன்மையான நிபந்தனையாக வைத்திருந்தால் தன் குடும்ப நலன் தவிர வேறு எதைப் பற்றியும் கவலைப்படாத கருணாநிதி அறநிலையத் துறையை உடனடியாகக் கலைத்திருப்பார். அப்படி நடக்காமல் போனதற்கு, நிச்சயம் கருணாநிதி காரணமல்ல.

Labels: ,

Tuesday, February 08, 2011

அசட்டு ஆர். எஸ். எஸ்.


பா.ஜ.க. மத்தியில் ஆட்சியில் இருந்தபோதே, உருப்படியாகத் தமிழில் டி.வி. சேனல் ஒன்றையாவது ஆரம்பித்திருந்தால், இப்படி வீடு வீடாக ஏறி இறங்கி தொண்டர்களின் நேரத்தை வீணடிக்க வேண்டி வந்திருக்காது.

துரதிஷ்டவசமாக, அறிவுள்ள தலைமை (குறிப்பாகத் தமிழகத்தில்) ஆர்.எஸ்.எஸ்.ஸுக்கு இதுவரை அமையவில்லை.

Labels: , ,

Monday, February 07, 2011

திண்ணை கடிதம்

தமிழ்க் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது பற்றித் திண்ணை இணைய இதழில் நான் எழுப்பி இருக்கும் கேள்வி: http://www.thinnai.com/?module=displaystory&story_id=81102061&format=html

Labels: , , ,