பிரேமானந்தா
வன்புணர்ச்சி மற்றும் கொலை வழக்குகளில் இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற பிரேமானந்தா காலமானார். இது பற்றிய தினமணி செய்தி.
1995ஆம் வருடம் இவர் மீது குற்றம் சாட்டப்பட்டு வழக்குத் தொடரப்பட்டது. அப்போது இவர் சிறிய காரியம் ஒன்றைச் செய்திருந்தால் இவ்வழக்கிலிருந்து சுலபமாக விடுதலை அடைந்திருக்கலாம். குறைந்தபட்சம், ஒரு பெரிய ஆதரவாளர் பட்டாளத்தையாவது திரட்டி இருக்கலாம்.
"நான் ஒரு பிற்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன். என்னுடைய வளர்ச்சியைப் பொறுக்க முடியாமல் பிராமணர்களும், சங்கர மடமும் சேர்ந்து கொண்டு செய்யும் சதியே இது” என்று அவர் கருணாநிதி பாணியில் ஓர் அறிக்கை விட்டிருந்தாலே போதும். பாதி வழக்குகள் பணால் ஆகியிருக்கும்.
ஆனால், அவர் அப்படிச் செய்யவில்லை. "நான் ஒரு இந்து சாமியார். எனக்கு எதிராக போப் சதி செய்கிறார்” என்றெல்லாம் அசட்டுத்தனமாகப் பேசி தன் தலையில் தானே மண்ணைப் போட்டுக் கொண்டார்.
அவர் சிறையில் இருந்த போது, அவரைக் கிறிஸ்தவராக மதம் மாற்றும் முயற்சிகள், அதே சிறையில் இருந்த (சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் நாவரசு கொலையாளி) ஜான் டேவிட்டின் மூலம் மேற்கொள்ளப் பட்டன. ஆனால், அவர் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.
பிரேமானந்தா தண்டனைக்குரிய பல தவறுகளைச் செய்தவர். ஆனால், "பார்ப்பன சதி" என்ற ஆயுதத்தைக் கையில் எடுத்துத் தப்பிக்க முயல்வில்லை. அதேபோல, கிறிஸ்தவராக மதம் மாறவும் இல்லை.
இதற்காக அவரைப் பாராட்டலாம்.
Labels: பார்ப்பன சதி, பிரேமானந்தா, மத மாற்றம்
1 Comments:
தண்டனைக்குரிய தவறுகளை அவர் உண்மையில் செய்தாரா என்பது ஐயத்துக்குரியது. - அரவிந்தன் நீலகண்டன்
Post a Comment
<< Home