பா. ரெங்கதுரையின் சிறு குறிப்புகள்

Tuesday, February 15, 2011

பஹ்ரைனில் இந்துத்துவ சதி

ஷியா பெரும்பான்மை நாடான பஹ்ரைன், ஸுன்னி முஸ்லிம்களால் ஆளப்படுகிறது. எகிப்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்குப் பின்னர், பஹ்ரைனில் வாழும் ஷியா முஸ்லிம்கள் அதே போன்ற போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். இதுவரை இரண்டு ஷியா ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசாங்கப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இது பற்றிய நியூ யார்க் டைம்ஸ் செய்தி.

பஹ்ரைன் நாட்டில் பல இந்துக்கள் பணிபுரிகின்றனர். இந்துத்துவர்கள் பலரும் அங்கு ஊடுருவியுள்ளனர். அமைதிப் பூங்காவாகத் திகழ்ந்து வரும் அந்த இஸ்லாமிய நாட்டில் ஷியாக்களின் இந்தப் போராட்டத்தைத் தூண்டிவிட்டு, இஸ்லாமிய ஒற்றுமையைக் குலைக்கும் சதி சூழ்ச்சிகளைச் செய்வது நிச்சயம் இந்துத்துவ சக்திகளாகவே இருக்க முடியும்.

இது பற்றிய உண்மைகளை வெளியே கொண்டுவர உடனடியாக ஓர் உண்மை அறியும் குழுவை பேராசிரியர் அ. மார்க்ஸ் தலைமையில் பஹ்ரைனுக்கு அனுப்ப வேண்டும்.

அக்குழுவினர் இந்துத்துவம் தவிர அமெரிக்க, யூத சதியும் இதில் அடங்கியுள்ளதா என்பதையும் கண்டறிய வேண்டும்.

பஹ்ரைனில் இந்துத்துவ சதி பற்றிய விரிவான கட்டுரைகளை, மார்ச் 2011 காலச்சுவடு இதழில் ஜே.என்.யு. ஆய்வாளர் க. திருநாவுக்கரசும், உயிர்மை இதழில் யமுனா ராஜேந்திரனும், தீராநதி இதழில் அ. மார்க்ஸும், கலா கௌமுதியில் சாரு நிவேதிதாவும் எழுதுகின்றனர்.

படிக்கத் தவறாதீர்கள்.

Labels: , , ,

2 Comments:

At February 16, 2011 at 5:04 PM, Anonymous Anonymous said...

பிரமாதம் ரங்கதுரை!
இந்துத்துவ சதி என்று சொன்னால் போதாது...இந்துத்துவப் பார்ப்பனிய சதி என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்!

-pravaahan.

 
At March 9, 2011 at 4:06 PM, Blogger கானகம் said...

எனக்கே ஒரு செகண்ட் ஒன்னுக்கு முட்டிருச்ச்சி..

:-) சொன்னாலும் சொல்வார்கள் என்ற தலைப்பிட்டிருக்கலாம்

 

Post a Comment

<< Home