பா. ரெங்கதுரையின் சிறு குறிப்புகள்

Tuesday, June 07, 2011

பட்ட காலிலேயே படும்

உமா பாரதி மீண்டும் பாரதிய ஜனதாவில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார். "வேண்டுமானால் அவர் வேறு மாநிலங்களில் பணியாற்றட்டும்; இந்தப் பக்கம் வந்துவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்" என்று மத்தியப் பிரதேச பாரதிய ஜனதா தலைவர்கள் சொல்லிவிட்டார்கள் போல. அடுத்த வருடம் நடைபெற இருக்கும் உத்தரப் பிரதேச மாநிலத் தேர்தலில் உமா பாரதி தம் கைவரிசையைக் காட்டுவார் என்று சொல்லியிருக்கிறார் பா.ஜ. தலைவர் நிதின் கட்கரி.

ஏற்கெனவே உ.பி.யில் பரிதாபகரமான நிலையில் இருக்கிறது பாரதிய ஜனதா. இதில் இவர் வேறு. "பட்ட காலிலேயே படும்; கெட்ட குடியே கெடும்" என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது.

Labels: , ,

Tuesday, May 31, 2011

விவேகானந்த கேந்திராவைக் கைப்பற்றுமா காலச்சுவடு?

தமிழ்நாட்டில் இந்து ஒற்றுமையை ஏற்படுத்தப் பாடுபடுவதாகச் சொல்லிக்கொள்ளும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் இணை அமைப்புகளுள் கன்னியாகுமரியில் அமைந்துள்ள விவேகானந்த கேந்திரா முக்கியமானது.

குமரி மாவட்டச் சான்றோர் சமூகத்தவரின் (இந்து நாடார்களின்) ஆதரவுடன், ஏகநாத் ரானடே அவர்களின் முயற்சியால் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு குமரியில் பல ஏக்கர்கள் பரப்பில் வளாகம் ஒன்றை அமைத்துச் சிறிய அளவிலேனும் பல்வேறு தொண்டுப் பணிகளைச் செய்து வருகிறது.

அன்றாட செலவுகளுக்குத் தேவையான வருமானத்துக்காக, குமரி விவேகானந்த கேந்திரா தன் வளாகத்தை இந்து ஆன்மீக மாநாடுகள், முகாம்கள் போன்றவற்றை நடத்துவோருக்கு வாடகைக்கு விடுவது வழக்கம்.

ஆனால், தெரிந்தோ தெரியாமலோ இந்து விரோதிகளின் கூடாரமான காலச்சுவடு நடத்தும் மாநாடு ஒன்றிற்குத் தன் வளாகத்தைத் தாரை வார்த்துள்ளது கேந்திரம்.

காலச்சுவடு நிறுவனர் சுந்தர ராமசாமி ஓர் இந்து மத துவேஷி. அமெரிக்க நிரந்தர வசிப்புரிமை பெற்றிருந்த அவர், தன்னை யாரும் பிராமணர் என்று சொல்லிவிடக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காக வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் இந்து மதத்தையும், இந்து இயக்கங்களையும் பழித்துப் பேசியும், எழுதியும் வந்தவர்.

குமரி மாவட்டத்தில் சில தீவிர கிறிஸ்தவ அமைப்புகளுடன் நட்பு பாராட்டி வந்த சு.ரா., சில கருத்தரங்கங்களைக் கிறிஸ்தவக் கல்வி நிறுவனங்களின் ஆதரவுடன் நடத்தி இருக்கிறார்.

1980களில் இலக்கிய அமைப்பு என்ற போர்வையில் கிறிஸ்தவ அமைப்பு நடத்திய மாநாடு ஒன்றில் கலந்துகொள்ள பாரிஸ் சென்றார் சு.ரா. தமக்கு இந்து ஆலயங்கள் தராத மன அமைதியை அங்கு ஒரு கிறிஸ்தவ சர்ச் தந்ததாகவும், தாம் கண்ணீர்விட்டு அழுத இடம் அது ஒன்றுதான் என்றும் ‘பிகாஸோவின் ஆடுகள்’ என்ற பயணக் கட்டுரையில் சு.ரா. விஷமப் பிரச்சாரம் செய்துள்ளார்.

சு.ரா.வின் நிர்வாகத்தில் இருந்தவரை காலச்சுவடு இதழில் பூடகமாகச் செய்யப்பட்ட இந்து விரோதப் பிரச்சாரம், அவருடைய மகன் கண்ணனின் நிர்வாகத்தில் மிக வெளிப்படையாகச் செய்யப்பட்டு வருகிறது. இஸ்லாமிய அடிப்படைவாத ஆதரவு தீவிரமாக முன்னெடுக்கப்படுகிறது. அவற்றுக்கு எதிராக எழுதப்படும் எந்த ஒரு காத்திரமான எதிர்வினையையும் காலச்சுவடு வெளியிடுவதில்லை. ஆ.இரா. வேங்கடாசலபதி, ஆ. சிவசுப்பிரமணியன் போன்ற கல்வித்துறை சார்ந்த இந்து துவேஷிகளே காலச்சுவடால் தமிழக அறிவுஜீவிகளாக முன்னிறுத்தப்படுகின்றனர்.

காலச்சுவடிலிருந்து பல்வேறு காரணங்களுக்காகப் பிரிந்து சென்று, சிற்றிதழ்களையும் பதிப்பகங்களையும் நடத்தும் பலரும் தீவிர இந்து விரோதிகளே. உதாரணமாக, உயிர்மை ஆசிரியர் மனுஷ்யபுத்திரன் என்கிற ஹமீதுவைக் குறிப்பிடலாம்.

இத்தகைய இந்து விரோதக் கும்பலான காலச்சுவடு, சு.ரா.வின் 80ஆவது பிறந்த நாளை முன்னிட்டுக் கருத்தரங்கம் ஒன்றை நடத்துகிறது. ஜூன் 3, 4 மற்றும் 5ஆம் தேதிகளில் நடத்தப்படும் இக்கருத்தரங்கில் இந்து வெறுப்பாளர்கள் பலரும் முக்கிய விருந்தினர்களாகக் கலந்து கொள்கின்றனர். இக்கருத்தரங்கம் நடத்தப்படும் இடம் குமரி விவேகானந்த கேந்திரம்.

சென்னை பெரியார் திடலைப் பணத்துக்காக எவருக்கும் வாடகைக்கு விடத் தயாராக இருந்தாலும், இந்து மதம் சம்மந்தப்பட்ட எந்த ஒரு நிகழ்வுக்கும் கி. வீரமணி தருவதில்லை. அதை ஒரு கொள்கையாகவே வைத்திருக்கிறார்.

அதேபோல, விவேகானந்த கேந்திரமும் தன் வளாகத்தைக் காலச்சுவடு போன்ற இந்து விரோத அமைப்புகள் நடத்தும் கருத்தரங்கங்களுக்குத் தரக்கூடாது.

இந்து விரோதிகளால் நடத்தப்படும் இந்தக் கருத்தரங்கில் கலந்துகொள்ளும் எழுத்தாளர் ஜெயமோகனையும் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

Labels: , , ,

Monday, May 30, 2011

தமாசு

அராத்து: உத்தம தமிழ் எழுத்தாளன் எழுதிய கதைகளிலேயே உங்களுக்குப் பிடித்தது எது?

சாரு: நாச்சார் மட விவகாரம்.

Labels: , ,

Sunday, May 29, 2011

கருணாநிதி இடித்த கோயில்கள் திரும்பக் கட்டப்படுமா?

திருக்குவளை தீயசக்தி கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம், புதிய கட்டுமானங்கள் என்ற போர்வையில் தமிழகம் முழுவதும் நூற்றுக் கணக்கான இந்துக் கோயில்கள் இடித்துத் தரை மட்டமாக்கப்பட்ட வரலாறு பலருக்கும் தெரிந்ததே. இத்தகைய பாதகச் செயலைச் செய்ய, கருணாநிதியின் வஞ்சக மனம் விக்கிரக வெறுப்பாளர்களான தீவிர இஸ்லாமியர்களையும், புராடெஸ்டெண்ட் தீவிர கிறிஸ்தவர்களையுமே தேர்ந்தெடுத்ததில் ஆச்சரியம் இல்லை.

ஆக்கிரமிப்பாக இருந்தாலுமே, கோயில்களிலுள்ள விக்கிரகங்களைப் பாதுகாப்பான வேறு இடத்துக்கு மாற்றிய பின்னரே அக்கோயில்கள் அகற்றப்படலாம் என்ற உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலை ஆருர் ஔரங்கசீப் என்றுமே பின்பற்றியதில்லை.

இந்து வெறுப்பாளர் கருணாநிதியின் இத்தகைய கொடும் செயல்களை எதிர்த்துப் போராடியிருக்க வேண்டிய தமிழக இந்து அமைப்புகள், ஒரு சில இடங்களில் மட்டுமே பெயரளவில் சிறிய போராட்டங்களை நடத்தின. கருணாநிதியின் அடிப்பொடியான இல. கணேசன், கருணாநிதிக்கு எதிராக இந்து அமைப்புகள் எதையும் செய்து விடாமல் பார்த்துக் கொண்டார்.

ஆரூர் ஔரங்கசீப்பால் புதிய சட்டசபை வளாகம் என்ற பெயரில் ஓர் அரக்கு மாளிகை எழுப்பட்டபோது, அந்த இடத்தில் மக்கள் வழிபட்டுக் கொண்டிருந்த இயற்கை விநாயகர் கோயிலும், இஷ்ட லிங்கேஸ்வரர் கோயிலும் இடித்துத் தரை மட்டமாக்கப்பட்டன. அக்கோயில்களில் இருந்த விநாயகர் சிலையும், சிவலிங்கமும் என்ன செய்யப்பட்டன என்பது பற்றி எவரும் கேள்வி எழுப்பவும் இல்லை; கருணாநிதி பதில் சொல்லவும் இல்லை. கோபாலபுரத்திலும், சி.ஐ.டி. காலனியிலும் அவை இன்னமும் படிக்கட்டுகளாகப் பயன்படுத்தப்படலாம்.

புதிய வளாகத்திலுள்ள கட்டிடங்களைச் செம்மொழி நூலகமாகவோ அல்லது அரசினர் மருத்துவமனையாகவோ மாற்றும் திட்டம் ஆளும் அ.தி.மு.க.வுக்கு இருப்பதாகத் தெரிகிறது. அது எப்படி இருந்தாலும், ஆரூர் ஔரங்கசீப்பினால் இடித்துத் தரை மட்டமாக்கப்பட்ட இயற்கை விநாயகர் ஆலயமும், இஷ்ட லிங்கேஸ்வரர் கோயிலும் அதே வளாகத்தில் மீண்டும் கட்டப்பட்டு விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட வேண்டும்.

Labels: , , , ,

Thursday, May 19, 2011

தமிழக தேர்தல் முடிவுகள்

எதிர்பார்த்தது போலவே அல்லது விரும்பியது போலவே ஆரூர் ஔரங்கசீப், திருக்குவளை தீயசக்தி கருணாநிதியின் மாஃபியா கும்பல் படுதோல்வி அடைந்துவிட்டது.



படுதோல்வி உறுதி என்று தெரிந்தும் திமுக கூட்டணியில் இடம்பெற்ற பிற கட்சிகளுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.



திமுகவுடனான காங்கிரஸ் கட்சியின் கூட்டணி உறுதியான நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் தா. பாண்டியன், “உடன்கட்டை ஏறுவது என்று முடிவு செய்துவிட்டவரைத் தடுக்கவா முடியும்?” என்று கேலியாகச் சொன்னது திமுக கூட்டணிக் கட்சிகள் அனைத்துக்குமே பொருத்தமாகிவிட்டதை நினைத்தால் சிரிப்புதான் வருகிறது. இதில் பரிதாபப்பட ஒன்றுமில்லை.

Labels:

Sunday, April 24, 2011

தமிழ்ஹிந்து நீக்கிய மறுமொழி

தமிழ்ஹிந்து இணையதளத்தில் ஆர். கோபாலன் எழுதி வெளியிடப்பட்டுள்ள இயேசுவை இந்துக்கள் கும்பிடலாமா? கட்டுரைக்கு நான் எழுதிய மறுமொழி முதலில் வெளியிடப்பட்டது. ஆனால், பின்னர் நீக்கப்பட்டுவிட்டது.

இந்து நலன்களைவிட ஜெயமோகனைப் பகைத்துக் கொள்ளக்கூடாது என்பதையே முதன்மையாகக் கருதும் தமிழ்ஹிந்து ஆசிரியர் குழுவை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

நீக்கப்பட்ட மறுமொழியாவது:

ஜெயமோகன் என்ற இந்துப் பெயரில் எழுதிவரும் கிறிஸ்தவ எழுத்தாளர், இக்கட்டுரைக்கு எதிராக எப்படியெல்லாம் ஜல்லி அடிக்கப்போகிறார் பாருங்கள். தமாசாக இருக்கப் போகிறது.

Labels: , ,

Tuesday, March 22, 2011

தமிழ் ஹிந்துவால் நீக்கப்பட்ட வார்த்தைகள்

தமிழ்ஹிந்து இணைய தளத்தில் வெளிவந்துள்ள 'விருதுக் கொலை' சிறுகதை பற்றி நான் எழுதிய மறுமொழி ஒன்றின் சில வார்த்தைகள் நீக்கப்பட்டுள்ளன.

நான் எழுதிய மறுமொழியாவது:

"என் விரிந்த யோனியில்" என்று ஆரம்பித்து ஏதேனும் கவிதை எழுதி திட்டித் தீர்க்கப் போகிறார் பாருங்கள்.

'என் விரிந்த யோனியில்’ என்ற வார்த்தைகள் நீக்கப்பட்டுள்ளன. "செட்டியார் ஜாதி வெறியர்” போன்ற வார்த்தைகளைத்தான் தமிழ்ஹிந்து அனுமதிக்காது என்று நினைத்திருந்தேன். யோனி போன்ற அழகிய சங்கத வார்த்தைகளையும் அனுமதிப்பதில்லை என்பது இப்போதுதான் தெரிந்தது.

Labels: , , ,