பா. ரெங்கதுரையின் சிறு குறிப்புகள்

Thursday, September 02, 2010

தமிழ் ஹிந்து எடிட் செய்த மறுமொழி

தமிழ் ஹிந்து இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் ”காவி தீவிரவாதமா அல்லது ப.சிதம்பரத்தின் நிறக்குருட்டு பாதிப்பா” என்ற கட்டுரைக்கு மறுமொழியாக நான் எழுதியதில் ஒரு முக்கியமான வார்த்தை நீக்கப்பட்டுள்ளது.


நான் எழுதிய மறுமொழியாவது:

Merchant of Death என்ற பெயருக்கு முற்றிலும் தகுதியானவர் ப. சிதம்பரம் செட்டியார்தான். முன்பு நிதியமைச்சராக இருந்தபோது பாரதத்தின் பொருளாதாரத்தை முற்றிலும் சீரழித்து இந்துக்களை ஓட்டாண்டிகளாக்கி அன்னிய கிறிஸ்தவ முதலாளிகள் கொழுக்க வழிசெய்தார். இப்போது உள்துறை அமைச்சர் என்ற போர்வையில் இஸ்லாமிய, கிறிஸ்தவ, இடதுசாரி பயங்கரவாதங்களுக்கு நெய் வார்த்து வளர்த்துவிடுகிறார். இவர் போன்ற நபர்களைப் பதவியில் நீடிக்கவிடுவது அகில பாரத அளவில் இந்துக்களின் வாழ்வுரிமையையே கேள்விக்குறி ஆக்கிவிடும்.

- இதில் ‘செட்டியார்’ என்ற ஜாதிப் பெயரை நீக்கிவிட்டு தமிழ் ஹிந்து என் மறுமொழியைப் பிரசுரித்துள்ளது. Merchant என்று குறிப்பிடும்போது ப. சிதம்பரத்தின் ஜாதிப் பட்டமாகிய ‘செட்டியார்’ என்பதனையும் குறிப்பிட்டு எழுதுவதே பொருத்தமாக இருக்கும்.

கடந்த குஜராத் மாநில சட்ட சபைத் தேர்தலின்போது, நரேந்திர மோடி ஒரு செட்டியார் (வைசியர்) என்னும் பொருள்பட சோனியா காந்தி பேசியது நினைவிருக்கலாம். அப்போது தமிழகத்தைச் சேர்ந்த செட்டியார்கள் எவரும் அதைக் கண்டிக்க முன்வரவில்லை. ப. சிதம்பரத்தைச் செட்டியார் என்று சொல்வதனால் மட்டும் அவர்கள் மனம் புண்பட்டுவிடப் போகிறதா?

மேலும், சாதிப் பட்டத்தைத் தவிர்ப்பது என்பது திராவிட இயக்கத்தினர் மற்றும் தமிழக இடதுசாரியினரால் தமிழக இந்துக்களின்மீது திணிக்கப்பட்ட ஒரு கருத்தியல் வன்முறை. ”ஜாதி அமைப்பு என்பதே அயோக்கியத்தனமானது; ஜாதிகளை உருவாக்கிய இந்து மதம் ஒழிய வேண்டும்” என்ற விஷமப் பிரசாரத்திற்கு தமிழ் ஹிந்து போன்ற இணையதளங்களும் இரையாகிவிட்டது வருத்தம் அளிக்கிறது.

தமிழக இந்துக்களின் பிரிக்க முடியாத அங்கங்களான ஒவ்வொரு ஜாதியினருக்குமே பெருமிதம் தரக்கூடிய வரலாறு உண்டு. அப்பெருமித உணர்வு எப்படிக் கிறிஸ்தவ மிஷனரிகளாலும், இடதுசாரி ஆய்வாளர்களாலும் திட்டமிட்டு மறைக்கப்பட்டு வருகிறது என்பதை வெளிக்கொணராமல், ஜாதிப் பெயர்களை நீக்கி மறுமொழிகளை வெளியிடுவது எந்த நல்ல விளைவையும் ஏற்படுத்தப்போவதில்லை என்பதை தமிழ் ஹிந்து உணர்ந்துகொள்ள வேண்டும்.

Labels: ,

0 Comments:

Post a Comment

<< Home