பா. ரெங்கதுரையின் சிறு குறிப்புகள்

Tuesday, May 31, 2011

விவேகானந்த கேந்திராவைக் கைப்பற்றுமா காலச்சுவடு?

தமிழ்நாட்டில் இந்து ஒற்றுமையை ஏற்படுத்தப் பாடுபடுவதாகச் சொல்லிக்கொள்ளும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் இணை அமைப்புகளுள் கன்னியாகுமரியில் அமைந்துள்ள விவேகானந்த கேந்திரா முக்கியமானது.

குமரி மாவட்டச் சான்றோர் சமூகத்தவரின் (இந்து நாடார்களின்) ஆதரவுடன், ஏகநாத் ரானடே அவர்களின் முயற்சியால் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு குமரியில் பல ஏக்கர்கள் பரப்பில் வளாகம் ஒன்றை அமைத்துச் சிறிய அளவிலேனும் பல்வேறு தொண்டுப் பணிகளைச் செய்து வருகிறது.

அன்றாட செலவுகளுக்குத் தேவையான வருமானத்துக்காக, குமரி விவேகானந்த கேந்திரா தன் வளாகத்தை இந்து ஆன்மீக மாநாடுகள், முகாம்கள் போன்றவற்றை நடத்துவோருக்கு வாடகைக்கு விடுவது வழக்கம்.

ஆனால், தெரிந்தோ தெரியாமலோ இந்து விரோதிகளின் கூடாரமான காலச்சுவடு நடத்தும் மாநாடு ஒன்றிற்குத் தன் வளாகத்தைத் தாரை வார்த்துள்ளது கேந்திரம்.

காலச்சுவடு நிறுவனர் சுந்தர ராமசாமி ஓர் இந்து மத துவேஷி. அமெரிக்க நிரந்தர வசிப்புரிமை பெற்றிருந்த அவர், தன்னை யாரும் பிராமணர் என்று சொல்லிவிடக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காக வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் இந்து மதத்தையும், இந்து இயக்கங்களையும் பழித்துப் பேசியும், எழுதியும் வந்தவர்.

குமரி மாவட்டத்தில் சில தீவிர கிறிஸ்தவ அமைப்புகளுடன் நட்பு பாராட்டி வந்த சு.ரா., சில கருத்தரங்கங்களைக் கிறிஸ்தவக் கல்வி நிறுவனங்களின் ஆதரவுடன் நடத்தி இருக்கிறார்.

1980களில் இலக்கிய அமைப்பு என்ற போர்வையில் கிறிஸ்தவ அமைப்பு நடத்திய மாநாடு ஒன்றில் கலந்துகொள்ள பாரிஸ் சென்றார் சு.ரா. தமக்கு இந்து ஆலயங்கள் தராத மன அமைதியை அங்கு ஒரு கிறிஸ்தவ சர்ச் தந்ததாகவும், தாம் கண்ணீர்விட்டு அழுத இடம் அது ஒன்றுதான் என்றும் ‘பிகாஸோவின் ஆடுகள்’ என்ற பயணக் கட்டுரையில் சு.ரா. விஷமப் பிரச்சாரம் செய்துள்ளார்.

சு.ரா.வின் நிர்வாகத்தில் இருந்தவரை காலச்சுவடு இதழில் பூடகமாகச் செய்யப்பட்ட இந்து விரோதப் பிரச்சாரம், அவருடைய மகன் கண்ணனின் நிர்வாகத்தில் மிக வெளிப்படையாகச் செய்யப்பட்டு வருகிறது. இஸ்லாமிய அடிப்படைவாத ஆதரவு தீவிரமாக முன்னெடுக்கப்படுகிறது. அவற்றுக்கு எதிராக எழுதப்படும் எந்த ஒரு காத்திரமான எதிர்வினையையும் காலச்சுவடு வெளியிடுவதில்லை. ஆ.இரா. வேங்கடாசலபதி, ஆ. சிவசுப்பிரமணியன் போன்ற கல்வித்துறை சார்ந்த இந்து துவேஷிகளே காலச்சுவடால் தமிழக அறிவுஜீவிகளாக முன்னிறுத்தப்படுகின்றனர்.

காலச்சுவடிலிருந்து பல்வேறு காரணங்களுக்காகப் பிரிந்து சென்று, சிற்றிதழ்களையும் பதிப்பகங்களையும் நடத்தும் பலரும் தீவிர இந்து விரோதிகளே. உதாரணமாக, உயிர்மை ஆசிரியர் மனுஷ்யபுத்திரன் என்கிற ஹமீதுவைக் குறிப்பிடலாம்.

இத்தகைய இந்து விரோதக் கும்பலான காலச்சுவடு, சு.ரா.வின் 80ஆவது பிறந்த நாளை முன்னிட்டுக் கருத்தரங்கம் ஒன்றை நடத்துகிறது. ஜூன் 3, 4 மற்றும் 5ஆம் தேதிகளில் நடத்தப்படும் இக்கருத்தரங்கில் இந்து வெறுப்பாளர்கள் பலரும் முக்கிய விருந்தினர்களாகக் கலந்து கொள்கின்றனர். இக்கருத்தரங்கம் நடத்தப்படும் இடம் குமரி விவேகானந்த கேந்திரம்.

சென்னை பெரியார் திடலைப் பணத்துக்காக எவருக்கும் வாடகைக்கு விடத் தயாராக இருந்தாலும், இந்து மதம் சம்மந்தப்பட்ட எந்த ஒரு நிகழ்வுக்கும் கி. வீரமணி தருவதில்லை. அதை ஒரு கொள்கையாகவே வைத்திருக்கிறார்.

அதேபோல, விவேகானந்த கேந்திரமும் தன் வளாகத்தைக் காலச்சுவடு போன்ற இந்து விரோத அமைப்புகள் நடத்தும் கருத்தரங்கங்களுக்குத் தரக்கூடாது.

இந்து விரோதிகளால் நடத்தப்படும் இந்தக் கருத்தரங்கில் கலந்துகொள்ளும் எழுத்தாளர் ஜெயமோகனையும் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

Labels: , , ,

0 Comments:

Post a Comment

<< Home