பா. ரெங்கதுரையின் சிறு குறிப்புகள்

Thursday, May 19, 2011

தமிழக தேர்தல் முடிவுகள்

எதிர்பார்த்தது போலவே அல்லது விரும்பியது போலவே ஆரூர் ஔரங்கசீப், திருக்குவளை தீயசக்தி கருணாநிதியின் மாஃபியா கும்பல் படுதோல்வி அடைந்துவிட்டது.படுதோல்வி உறுதி என்று தெரிந்தும் திமுக கூட்டணியில் இடம்பெற்ற பிற கட்சிகளுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.திமுகவுடனான காங்கிரஸ் கட்சியின் கூட்டணி உறுதியான நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் தா. பாண்டியன், “உடன்கட்டை ஏறுவது என்று முடிவு செய்துவிட்டவரைத் தடுக்கவா முடியும்?” என்று கேலியாகச் சொன்னது திமுக கூட்டணிக் கட்சிகள் அனைத்துக்குமே பொருத்தமாகிவிட்டதை நினைத்தால் சிரிப்புதான் வருகிறது. இதில் பரிதாபப்பட ஒன்றுமில்லை.

Labels:

0 Comments:

Post a Comment

<< Home