பட்ட காலிலேயே படும்
உமா பாரதி மீண்டும் பாரதிய ஜனதாவில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார். "வேண்டுமானால் அவர் வேறு மாநிலங்களில் பணியாற்றட்டும்; இந்தப் பக்கம் வந்துவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்" என்று மத்தியப் பிரதேச பாரதிய ஜனதா தலைவர்கள் சொல்லிவிட்டார்கள் போல. அடுத்த வருடம் நடைபெற இருக்கும் உத்தரப் பிரதேச மாநிலத் தேர்தலில் உமா பாரதி தம் கைவரிசையைக் காட்டுவார் என்று சொல்லியிருக்கிறார் பா.ஜ. தலைவர் நிதின் கட்கரி.
ஏற்கெனவே உ.பி.யில் பரிதாபகரமான நிலையில் இருக்கிறது பாரதிய ஜனதா. இதில் இவர் வேறு. "பட்ட காலிலேயே படும்; கெட்ட குடியே கெடும்" என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது.